×

காரைக்குடி வாலிபர் கொலை வழக்கில் 48 மணி நேரத்தில் 9 பேர் கைது: காவல்துறை அதிரடி

காரைக்குடி: காரைக்குடி வாலிபர் கொலை வழக்கில் 48 மணி நேரத்தில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 18.06.2023 ம்தேதி காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள US POLO என்ற துணிக்கடை முன்பாக மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா மைய்யிட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஞானசேகர் என்பவரது மகன் வினித் என்ற அறிவழகன் என்பவரை ஒரு கும்பல் அரிவாள் வாள் போன்ற ஆயுதங்களால் வெட்டி கொலை செய்தது தொடர்பாக அறிவழகனின் அப்பா ஞானசேகரன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை செய்யப்பட்டது.

புலன் விசாரணையில் மையிட்டான்பட்டியைச் சேர்ந்த மருதுசேணை அமைப்பின் தலைவர் ஆதிநாராயணன் என்பவருக்கும் இவ்வழக்கின் புகார்தாரர் ஞானசேகரன் என்பவருக்கும் 2019 ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி துணைத்தலைவர் தேர்தலில் ஏற்பட்ட மோதல் காரணமாகவும் விருநகர் சந்தை ஏலம் எடுப்பது தொடர்பாகவும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அதனை தொடர்ந்து சமீபத்தில் நடக்கவுள்ள விருதுநகர் சந்தை ஏலம் எடுக்க கொலைசெய்யப்பட்ட நபரான வினித் என்ற அறிவழகன் ஏற்பாடுகள் செய்து வந்துள்ளார். அதை அறிந்த ஆதிநாராயணன் மற்றும் அவரது தனுஷ் என்ற தனசேகரன் ஆகியோர்கள் நேரடியாகவும் பிறர் மூலமாகவும் வினித் என்ற அறிவழகன் மற்றும் அவரது குடும்பத்தார்களிடம் விருதுநகர் ஏலத்தில் கலந்து கொள்ளக்கூடாது மீறினால் கொலை செய்வோம் என்று மிரட்டல் விடுத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் காரைக்குடி தெற்கு காவல் நிலைய கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட வினித் என்ற அறிவழகள் சிறைக்கு சென்றவர் நீதிமன்ற உத்தரவுப்படி ஜாமீனில் வந்து காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் கையெழுந்திடுவதற்காக காரைக்குடி புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள லாட்ஜில் வாடகைக்கு ரூம் எடுத்து கையெழுத்திட்டு வந்தவரை நோட்டமிட்டு கண்காணித்த ஆதிநாராயணன் தரப்பைச் சேர்ந்த எதிரிகள் வினித்தை கொலை செய்ய திட்டம்தீட்டி கூலிப்படையை தயார் செய்து கடந்த 18.06.2023 ம்தேதி காலை காவல் நிலையத்திற்கு கையெழுத்திடுவதற்காக காலை 10.20 மணிக்கு லாட்ஜில் இருந்து வெளியில் வந்த வினித் என்ற அறிவழகனை மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பொதுமக்கள் பார்த்து அச்சப்படும் விதமாக ஓட ஓட விரட்டி கத்தி, வாள், அரிவாள் போன்ற கொடூரமான ஆயுதங்களால் வெட்டி கொலை செய்துள்ளார்கள்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பாக கொலைச்சம்பவம் நடந்த அமைப்பின் 48 மணிநேரத்திற்குள்ளாக மருதுசேணை தலைவர் ஆதிநாராயணனின் மனைவி என்பவருடன் பிறந்த தம்பியும் ஆதிநாராயணனின் மைத்துனருமான அமுதாராணி தனுஷ் என்ற தனசேகர், த/பெ குரு, வடக்கு பெருமாள் மேஸ்திரிவீதி மதுரை மற்றும் கூலிப்படையாக செயல்பட்ட மருதுசேணை அமைப்பின் சிவகங்கை மாவட்ட முன்னாள் செயலாளர் மருதுவிக்கி என்ற விக்னேஷ்வரன், த/பெ கருப்பையா, ஆவரங்காடு, திருப்பாச்சேத்தி, 3) சேது என்ற சேதுபதி, த/பெ பாலசுப்பிரமணியன், DRO காலனி, K.புதூர், மதுரை 4) சரவணன் என்ற சரவணக்குமார், தபெ வடிவேல், சுங்குராம்பட்டி, திருமங்களம். 5) தினேஷ் என்ற தினேஷ்குமார், தபொ கோவிந்தராஜ், சாஸ்திரிநகர், ஊமச்சிகுளம், மதுரை. 6) செல்வம் என்ற செல்வக்குமார்,

தபெ ஜவஹர், மதுரை 7) நவீன் என்ற நவீன்குமார், த/பெ கென்னடி, P.P.சாவடி, மதுரை 8) அஜீத்குமார், த/பெ கருப்புச்சாமி, ஆழ்வார்புரம், மதுரை, 9) ஸ்ரீதர், த/பெ கருப்பையா, சுங்குராம்பட்டி, திருமங்களம், மதுரை ஆகியோர்கள் கைதுசெய்யப்பட்டு அவர்களிடம் இருந்து கொலைச்சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட TN 69 AF 4747 என்ற ஸ்கார்பியோ கார் TN 67 AR 9205 நிஷான் சன்னி கார் ஆகியவையும் பதிவு எண் இல்லாத பல்சர் இருசக்கர வாகனமும் TN s9 cQ 4542 என்ற பதிவு எண் கொண்ட YAMAHA FZ-S வாகனமும் கொலைச்சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட கைப்பற்றப்பட்டுள்ளது.

The post காரைக்குடி வாலிபர் கொலை வழக்கில் 48 மணி நேரத்தில் 9 பேர் கைது: காவல்துறை அதிரடி appeared first on Dinakaran.

Tags : Karaikudi Valiper ,Karaikudi ,Mdhethi ,Police Action ,
× RELATED செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாவட்ட அளவில் சிறப்பிடம்